/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கான பணிமனை
/
தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கான பணிமனை
ADDED : ஜூலை 03, 2025 08:16 PM
கோத்தகிரி; கோத்தகிரி வட்டார தோட்டக்கலை -மலை பயிர்கள் துறை சார்பில், 'பாரதிய பிரக்ரிதிக் கிரிஷி பதாதி' திட்டத்தின் கீழ் கூட்டம் நடந்தது.
ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் மற்றும் இயற்கை விவசாயிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தோட்டக்கலை துணை இயக்குனர் நவநீதா வரவேற்றார். தோட்டக்கலை இணை இயக்குனர் சிவிலா மேரி தலைமை வகித்து திட்டம்கள் குறித்து விளக்கினார். தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி முனைவர் கவிதா, அங்கக வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பு தொழில்நுட்பம் குறித்து பேசினார்.
தோட்டக்கலை அலுவலர் சந்திரன், பயிர் சாகுபடியில் அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்தும், ஊட்டி மண் ஆய்வுக்கூட தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிதா, மண் மாதிரி சேகரிப்பு மற்றும் மண்வள மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில், நீலகிரி, கோவை, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் பரத்குமார் நன்றி கூறினார்.