ADDED : மார் 17, 2026 06:31 AM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி அருகே மீக்கேரி கிராமத்தில் உலக நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, ஜோகிகவுடர் முன்னிலை வகித்தார்.
ஊர் தலைவர் ரவிகுமார் தலைமை வகித்தார். மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் தலைவர் மனோகரன்பேசுகையில், '' சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் அதிகரித்துள்ளன. நுாதனமான வழிகளில் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பது தினசரி நிகழ்வாக ஆகிவிட்டது, ஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாறும் நுகர்வோரை பாதுகாக்க சட்டத்தில் வழியுள்ளது. தவறுகள் நடக்கும் போது தட்டிக் கேட்க வேண்டும்,''என்றார். கூட்டத்தில், கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.
