sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு; கட்டணமின்றி சட்ட உதவிகளை பெற அறிவுரை

/

 உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு; கட்டணமின்றி சட்ட உதவிகளை பெற அறிவுரை

 உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு; கட்டணமின்றி சட்ட உதவிகளை பெற அறிவுரை

 உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு; கட்டணமின்றி சட்ட உதவிகளை பெற அறிவுரை


ADDED : டிச 04, 2025 06:17 AM

Google News

ADDED : டிச 04, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள மாற்று திறன் குழந்தைகளுக்கான 'ரோட்டரி ஆஷியா' பள்ளியில் நடந்தது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமை வகித்து மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உணவு பொருட்களை வழங்கி பேசியதாவது:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அனைவரும் சமம். மனநல குறைபாடு பராமரிப்பு சட்டம்- 2017ன் கீழ், தற்போது தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியோரின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலான திட்டம் நடப்பு ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள உரிமைகள், மனநல குறைபாடு பராமரிப்பு சட்ட உரிமைகள், இச்சட்டங்களின் கீழ் என்னென்ன மாதிரியான வசதிகள் குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவைகள் செய்து தர முடியும்.

மேலும், சட்ட சேவைகள் அதிகாரங்கள் சட்டத்தின் படி இவர்களுக்கு சட்ட உதவிகள் பெற தகுதியுடையவர்கள் ஆவர். இவர்களுக்கு கட்டணமின்றி சட்ட உதவிகள் செய்ய முடியும்.

பிச்சை எடுக்க வைப்பது குற்றம் இந்த சட்டத்தில், இவர்களை யார் பராமரிக்கின்றனர், பாதுகாவலர் நியமனம்; மனநலம் சார்ந்து அளிக்க வேண்டிய மருத்துவ வசதிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மனநலம் குன்றியவர்களுக்கான சட்ட சேவைப் பிரிவு துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவர்களை பிச்சையெடுக்க வைப்பது குற்றமாகும். பாலியல் தொந்தரவிற்கு உள்ளாக கூடிய மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் குறித்து சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி புகார் செய்தால், அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை இந்த சமூகத்தில் பாதுகாத்து அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுப்பது நமது நோக்கமாகும். இளம்சிறார் சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்ட அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us