sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ உலக புவி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக புவி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக புவி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஏப் 25, 2025 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2025 11:54 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார், ; பந்தலுார் அருகே உப்பட்டியில் வனத்துறை, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நெல்லியாளம் நகராட்சி, போலீசார் இணைந்து உலக புவி தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

ஒருங்கிணைப்பாளர் அஜித் வரவேற்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து, 'உலக புவி தினம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பு,' குறித்து பேசினார்.

வனச்சரகர் சஞ்சீவி, மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு, தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் ஆகியோர், 'இயற்கை அழிவால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மரங்கள் நடுதல் மற்றும் வனங்களை பாதுகாத்தல், இயற்கை அழிவு தடுத்தல் குறித்தும், இயற்கை அழிவால் ஏற்படும் பாதிப்புகள்,' குறித்தும் விளக்கி பேசினர்.

தொடர்ந்து, மரக்கன்றுகளுடன் உப்பட்டி ஐ.டி.ஐ., மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஐ.டி.ஐ. வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி மின் பொறியாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் புவி தின விழிப்புணர்வு வாசகம் வெளியிடப்பட்டது. நகராட்சி பணியாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us