/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லாங்வுட் சோலையில் உலக ஈர நிலநாள் கருத்தரங்கு; நீலகிரியில் சதுப்பு நிலங்கள், சிறு ஓடைகள் குறைந்து வருவதாக வருத்தம்
/
லாங்வுட் சோலையில் உலக ஈர நிலநாள் கருத்தரங்கு; நீலகிரியில் சதுப்பு நிலங்கள், சிறு ஓடைகள் குறைந்து வருவதாக வருத்தம்
லாங்வுட் சோலையில் உலக ஈர நிலநாள் கருத்தரங்கு; நீலகிரியில் சதுப்பு நிலங்கள், சிறு ஓடைகள் குறைந்து வருவதாக வருத்தம்
லாங்வுட் சோலையில் உலக ஈர நிலநாள் கருத்தரங்கு; நீலகிரியில் சதுப்பு நிலங்கள், சிறு ஓடைகள் குறைந்து வருவதாக வருத்தம்
ADDED : பிப் 06, 2025 08:24 PM
கோத்தகிரி; கோத்தகிரி லாங்வுட் சோலையில், உலக ஈரநாள் கருத்தரங்கு மற்றும் இயற்கை முகாம் நடந்தது.
கோத்தகிரி வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் பசுமை நீலகிரி திட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு, ரேஞ்சர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ பேசியதாவது:
கடந்த, 1971, பிப்., 2ம் தேதி ஈரான் நாட்டில் உள்ள ராம்சார் நகரத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் மாநாட்டில், 'உலக அளவில் உள்ள அனைத்து ஈரநிலங்களையும் பாதுகாக்க வேண்டும்,' என, முடிவு எடுக்கப்பட்டது. அதனை நினைவு கூறும் விதமாக, ஆண்டுதோறும் பிப்., 2ம் தேதி உலக ஈர நில நாள் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்கள் 'ராம்சார் சைட்' என, அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் லாங்வுட் சோலையும் ராம்சார் சைட் என அங்கீகரிப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஈரநிலங்கள் காலநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில், 'கார்பனை' உறிஞ்சி பூமி சூடாவதை தடுக்கின்றன. காலநிலை மாற்றத்தின் காரணமாக, ஏராளமான ஈர நிலங்கள் அழிந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கடந்த, 200 ஆண்டுகளில், பல்லாயிரம் சிறு ஓடைகள் மற்றும் சதுப்பு நிலங்கள் காணாமல் போயுள்ளதாக ஆய்வு கூறுகிறது. இது வருத்தமான உண்மையாகும். உலக அளவில் ஈர நிலங்கள், 40 சதவீதம் வரை, பல்லுயிர் சூழல்களை கொண்டுள்ளன. இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தான் பூமியை காக்கும் கடைசி முயற்சியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய பசுமைப்படை திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், ''லாங்வுட் சோலை போன்ற காடுகள், பல்லுயிர் சூழல் மண்டலமாக அமைந்துள்ளன. மூலிகை செடிகள், மருத்துவ குணமிக்க இலைகள், வேர்கள், பட்டைகள் போன்றவை இத்தகைய காப்பு காடுகளில் ஏராளமாக காணப்படுகின்றன. குறிப்பாக, புற்றுநோயை குணப்படுத்தும் ருபூஸ் போட்டிட என்ற தாவரம் பரவலாக காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
சுற்றுச்சுழல் ஆய்வாளர் ஜனார்த்தனன், 'மாணவர்களிடையே மேகங்களின் தன்மையை கண்டறிதல், காற்றின் அழுத்தம் மற்றும் ஈரப்பதம்ஆகியவற்றை கண்டறிவது,' குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
லயன்ஸ் கிளப் தலைவர் ராமச்சந்திர ரெட்டி, குன்னுார் பிராவிடன்ஸ் கல்லுாரி பேராசிரியர் லீனா உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்கள் சோலையில் நடை பயிற்சி மேற்கொண்டனர். வனவர் முருகன் நன்றி கூறினார்.

