/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நோய் தாக்குதலால் பயறு செடியில் மகசூல் பாதிப்பு
/
நோய் தாக்குதலால் பயறு செடியில் மகசூல் பாதிப்பு
ADDED : பிப் 06, 2024 09:57 PM

கூடலுார்:கூடலுார் பகுதியில், பயறு செடிகளில் வைரஸ் நோய் தாக்குதலால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுார் விவசாயிகள் கோடை காலத்தில், பாகற்காய், பீன்ஸ், முள்ளங்கி, பயிறு, கத்திரிக்காய் உள்ளிட்ட விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள், செடிகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
பாகற்காய் செடிகளை தொடர்ந்து, தற்போது பயறு செடிகளில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'பாகற்காய், பயறு செடிகளை வைரஸ் நோய் தாக்கி வருவதால், மகசூல் பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வரும் அரசு துறையினர், நோய் தாக்குதல் ஏற்படும், நஷ்டத்தை ஈடு செய்ய நிவாரணம் வழங்குவதுடன், செடிகளில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூல் கிடைக்க உதவ வேண்டும்,' என்றனர்.

