ADDED : ஜூலை 07, 2025 09:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஞ்சூர்; மஞ்சூர் பள்ளி மாணவர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
மஞ்சூரில் மாதா கவுடர், சினிகியம்மாள் அறக்கட்டளை மற்றும் காந்தி சேவா அறக்கட்டளை இணைந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கணினி, தையல் பயிற்சி அளித்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அறக்கட்டளை வளாகத்தில் மஞ்சூர் ராஜயோக தியான பயிற்சி நிலையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். அறக்கட்டளை தலைவர் வாசுதேவன், செயலாளர் போஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.