/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விளையாட்டு விடுதியில் சேர 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்
/
விளையாட்டு விடுதியில் சேர 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு விடுதியில் சேர 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு விடுதியில் சேர 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 29, 2025 09:06 PM
ஊட்டி; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டு விடுதிகளில், மாணவ, மாணவியர்கள் சேர, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், 28 இடங்களில் செயல்படுகின்றன.
விடுதி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம், ஏப்., 17ம் தேதி முதல், www.sdat.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விடுதியில் சேர விருப்பமுள்ள, 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள், மே., 5ம் தேதி மாலை, 5:00 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்று கொள்ளப்படும்.
மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் மே, 7ம் தேதி காலை, 7:00 மணிக்கு ஆண்களுக்கும்; 8ம் தேதி காலை, 7:00 மணிக்கு பெண்களுக்கும் நடைபெறும். இதற்கான தகவல், குறுச்செய்தி உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைக்கோள் பந்து, கபடி, கையுந்து மற்றும் கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்) ஆகிய தேர்வு போட்டிகள் எஸ்.ஏ.டி.பி., திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுபவர்களின் விபரம், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், தகவல் பெற, 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

