தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 23, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:

தீபாவளி பண்டிகை நவ., 8 ம் தேதி கொண்டாடப்படுகிறது. நீலகிரியில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விருப்பம் உள்ளவர்கள் இ-–-சேவை மையங்கள் வாயிலாக அக் ., 10ம் தேதி மாலை , 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். மாவட்டத்திலுள்ள அனைத்து இ–சேவை மையங்கள் வாயிலாக , https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பதாரரின் புகைப்படம் , நில வரைபடம் , கடை அமைக்க இருக்கும் இடத்தின் வரைபடம் , தற்காலிக பட்டாசு கடை அமைக்க இருக்கும் இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்கள் விண்ணப்பதாரர் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் எனில் அதற்கான ஆவணங்கள் நகல் இருக்க வேண்டும்.

நடப்பு ஆண்டின் சொத்துவரி செலுத்திய ரசீது நகல் , வாடகை இடம் எனில் வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் , 100 ரூபாய்க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதம் பெற வேண்டும்.

விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டதெனில் , தற்காலிக பட்டாசு உரிமத்தினையும்; நிராகரிக்கப்பட்டது எனில் நிராகரிக்கப்பட்டதற்கான ஆணையையும் விண்ணப்பதாரர் இ-–சேவை மைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு , அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us