/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாய செயல்பாடுகளில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்; மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அழைப்பு

ADDED : ஜூன் 16, 2025 08:15 PM
ஊட்டி; மக்கள் விவசாயம், விவசாயம் சாரா செயல்பாடுகளில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் விவசாயம் மற்றும் விவசாயம் சாரா செயல்பாடுகளில் பணியாற்றிட தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விவசாயம் சார்ந்த மாவட்ட பயிற்றுனருக்கு விவசாயம் , கால்நடை அறிவியல், தோட்டக்கலை சம்பந்தப்பட்ட இளநிலை பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விவசாயம் சாரா மாவட்ட அளவிலான வளப்பயிற்றுநருக்கு ஊரக வளர்ச்சி, சமூகப் பணி, தொழில் மேலாண்மை சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் மாவட்ட வளப்பயிற்றுனர் சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது, 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊரக பகுதிகளில் பணியாற்ற, தமிழ் எழுத மற்றும் பேசவும் பணி தொடர்பாக ஆங்கில அறிவும் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94440 94131 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.