/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் இளம் படுகர் சங்க தேர்தல்; தலைவர், துணை தலைவர்கள் தேர்வு
/
ஊட்டியில் இளம் படுகர் சங்க தேர்தல்; தலைவர், துணை தலைவர்கள் தேர்வு
ஊட்டியில் இளம் படுகர் சங்க தேர்தல்; தலைவர், துணை தலைவர்கள் தேர்வு
ஊட்டியில் இளம் படுகர் சங்க தேர்தல்; தலைவர், துணை தலைவர்கள் தேர்வு
ADDED : மே 09, 2025 05:48 AM

ஊட்டி : ஊட்டியில் இளம் படுகர் சங்க தேர்தல் நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகரின மக்களின் பிரதான அமைப்பாக, இளம் படுகர் சங்கம் உள்ளது. இச்சங்கம் வாயிலாக படுகரின மக்களுக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தலைவர் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தலை ஒட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம், 9, 10ம் தேதிகளில் நடந்தது. வேட்பு மனு பரிசீலனை, 11ம் தேதி நடந்தது. கடந்த, 5ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.
அதில், மொத்தம், 797 ஓட்டுக்கள் பதிவானது. 561 ஓட்டுக்கள் பெற்று தலைவராக தியாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு துணை தலைவர்களுக்கான தேர்தலில் மூன்று பேர் போட்டியிட்டனர். மோகன் குமார், 702 ஓட்டுக்கள்; ரவி, 623 ஓட்டுக்கள் பெற்று துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செயலாளராக ராதாகிருஷ்ணன், பொருளாளராக ராமன் , செயற்குழு உறுப்பினர்களாக உதயதேவன், பீமன், சுரேஷ், என். சிவக்குமார், பிரகாஷ்பாபு, சிவக்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக தியாகராஜன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் அதிகாரியான வக்கீல் ரவிக்குமார் சான்றிதழ் வழங்கினார்.