/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் இளம் படுகர் சங்க ஆலோசனை கூட்டம்
/
ஊட்டியில் இளம் படுகர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 03, 2024 12:05 AM
ஊட்டி : ஊட்டியில், இளம் படுகர் சங்கம் மற்றும் நாக்குபெட்டா நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
சங்க தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். நாக்குபெட்டா நலச்சங்க தலைவர் பாபு முன்னிலை வகித்தார். பின்னர், சங்க தலைவர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ''சுற்றுலா துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு உள்ளார்.
நீலகிரி சுற்றுலா மாவட்டமாக உள்ளதால், அவர் அமைச்சராக இருந்தால் வளர்ச்சி பணிகளுக்கு ஏதுவாக இருக்கும். படுகரின மக்களை பிரதிநிதி துவப்படுத்தும் வகையில் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும். ஊட்டியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும்,'' என்றனர்.
நாக்குபெட்டா நலச்சங்க செயலாளர் மணிவண்ணன், ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.