/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் இளைஞர் மரணம்
/
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் இளைஞர் மரணம்
ADDED : செப் 08, 2025 09:31 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே பாக்கனா பகுதி இளைஞர் கேரளா மாநில சாலையில் பஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பந்தலுார் அருகே பாக்கனா பகுதியை சேர்ந்தவர் முகமது ஹாசிம் இஸ்மாயில்,32. இவர் கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரியில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை வீட்டிலிருந்து தனது பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மாநில எல்லையான பாட்டவயல் சோதனை சாவடியை ஒட்டிய கேரளா மாநிலம் முண்டக்கொல்லி என்ற இடத்தில், கோவைக்கு சென்று கொண்டிருந்த கேரளா மாநில அரசு பஸ் பைக் மீது மோதியது.
அதில், தலை முழுமையாக நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சீராள் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.