/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிற் பயிற்சியில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு
/
தொழிற் பயிற்சியில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 01, 2025 09:44 PM
ஊட்டி; மாவட்ட இளைஞர்கள் தொழிற் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் கிராமப்புற இளைஞர்களின் சுய வேலைவாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னோடி வங்கிகள் வாயிலாக ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இப் பயிற்சி மையங்களில், 'மொபைல் போன் பழுது நீக்குதல், ஓட்டுனர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல்,' உள்ளிட்ட , 64 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் கட்டணம் இன்றி, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட கிராம புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
கல்வி தகுதிக்கு ஏற்ற பயிற்சி வழங்கப்படுகிறது. கிராமப்புற இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன் பெற விரும்பினால் நமது மாவட்டத்தில் உள்ள கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், யூ.எஸ்.எஸ்.எஸ்., தொண்டு நிறுவனம் மற்றும் திட்ட இயக்குனர் தமிழ்நாடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம், கூடுதல் கலெக்டர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.