/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியான சம்பவம்: மேலும் ஒருவர் கைது
/
கூடலுாரில் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியான சம்பவம்: மேலும் ஒருவர் கைது
கூடலுாரில் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியான சம்பவம்: மேலும் ஒருவர் கைது
கூடலுாரில் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியான சம்பவம்: மேலும் ஒருவர் கைது
ADDED : ஜன 30, 2025 02:57 AM

கூடலுார்:கூடலுார் அருகே, வன விலங்கு வேட்டைக்கு சென்ற இடத்தில், துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியான சம்பவத்தில், வேட்டை கும்பலுக்கு துப்பாக்கி கொடுத்து உதவியதாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை பகுதியை சேர்ந்தவர் ஜெம்ஷித்,37. தேவர்சோலை பேருராட்சி இளைஞர் காங்., தலைவராக இருந்த இவர், உட்பட 5 பேர், 24ம் இரவு வன விலங்கு வேட்டைக்கு சென்றுள்ளனர். வேட்டையின் போது, துப்பாக்கி தோட்டா பாய்ந்து ஜெம்ஷித் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து, 25ம் தேதி அதிகாலை மேலும் ஒன்பது பேரை அழைத்து, அவர் உடலை கூடலுார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றவுடன், யானை தாக்கி ஜெம்ஷித் இறந்ததாக நாடகம் ஆடினர்.
தொடர்ந்து, கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், தேவாலா டி.எஸ்.பி., சரவணகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய விசாரணைக்கு பின், துப்பாக்கி சூட்டில் இறந்த ஜெம்ஷித்துடன் வேட்டைக்கு சென்ற நவசாத்,35, ஜாபர்அலி,43. ஐதர்அலி,59, சதிஷ்,37, மற்றும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து மூன்று துப்பாக்கிகள், இரண்டு கார்கள், தோட்டக்கள், கத்தி, டார்ச் லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், வேட்டை கும்பலுக்கு துப்பாக்கி கொடுத்து உதவியது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான், 59, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
தனிப்படை போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.