தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தொழிலாளியை குத்திக் கொன்ற வாலிபர் கைது

தொழிலாளியை குத்திக் கொன்ற வாலிபர் கைது

தொழிலாளியை குத்திக் கொன்ற வாலிபர் கைது


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 07:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி அருகே தனியார் தொழிற்சாலையில், தொழிலாளியை குத்திக் கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோத்தகிரி அருகே, பனஹட்டி பகுதியில், இமாலயா தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது. வட மாநில தொழிலாளர்கள் பலர், அங்குள்ள குடியிருப்பில் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை, சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சைலேஷ் குமார் பஞ்சரே, 27, வேலைக்கு சென்றுள்ளார். மதிய உணவுக்கு வீட்டிற்கு சென்ற அவர், திரும்பி வேலைக்கு செல்லவில்லை.

அந்த நேரத்தில், தொழிலாளர்களுக்கு இடையே, வேலை செய்வது தொடர்பாக தகராறு நடந்துள்ளது. அப்போது, சக தொழிலாளியான, மேற்கு வங்கம், கல்சினி ஜல்பைகுரி பகுதியை சேர்ந்த, பரத் கர்மாகர், 35 என்பவர், சைலேஷை கத்தியால் குத்தி, அங்கிருந்து தப்பியுள்ளார்.

கோத்தகிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சைலேஷ், வரும் வழியில் இறந்துள்ளார்.

கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயசாரதி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சக தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வேலை செய்வது தொடர்பாக எழுந்த தகராறில் ஆத்திரமடைந்த, அதே தொழிற்சாலையில் பணிபுரியும் பரத் கர்மாக்கர் என்பவர், சைலேஷை கத்தியால் குத்தி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

வழக்கு பதிவு செய்த போலீசார், தலை மறைவாக இருந்த, பரத் கர்மாகரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us