/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போக்சோ வழக்கில் தேடப்படும் வாலிபர்; 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்க நடவடிக்கை
/
போக்சோ வழக்கில் தேடப்படும் வாலிபர்; 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்க நடவடிக்கை
போக்சோ வழக்கில் தேடப்படும் வாலிபர்; 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்க நடவடிக்கை
போக்சோ வழக்கில் தேடப்படும் வாலிபர்; 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்க நடவடிக்கை
ADDED : ஜூலை 06, 2025 10:42 PM

கூடலுார்; கூடலுாரில் 'போக்சோ' வழக்கில் தேடப்படும் வாலிபர் வெளிநாட்டில், இருப்பதால் அவருக்கு, 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கூடலுாரை சேர்ந்த, 18 வயது மாணவி, தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த ஆண்டு, இவருக்கும் நியாஸ், 28, என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
அப்போது மாணவிக்கு,17 வயது என்பதால், 18 வயது நிரம்பிய பின் திருமணம் செய்து கொள்ளலாம், என, குடும்பத்தார் முடிவு செய்தனர்.
இதனிடையே, அந்த பெண்ணுடன், நிவாஸ் நெருங்கி பழகி உள்ளார். 'அதனை வெளியே சொல்ல வேண்டாம்,' என, மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் நியாசை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
இந்நிலையில், 18 வயது நிரம்பிய அந்த பெண்ணுக்கு, நடப்பு ஆண்டு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது.
இதனிடையே, வெளிநாட்டு வேலைக்கு சென்ற நியாஸ், பெண்ணை பழிவாங்கும் நடவடிக்கையாக, அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது குறித்து, கூடலுார் அனைத்து மகளிர் நிலைய போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த போது. பெண்ணுக்கு 17 வயது என்பதால், மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். நியாஸ் வெளிநாட்டில் இருப்பதால். அவரை கைது செய்ய, 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.