ADDED : ஜூலை 14, 2011 11:51 PM
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவன செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் ராமமீனாட்சி, முகாமை தொடங்கி வைத்தார். துணை முதல்வர் பாகீரதி, துறைத்தலைவர் முருகசுந்தரி ஆகியோர் ரத்த வகை கண்டறிதழின் முக்கியத்துவம் குறித்து பேசினர். இதில் இளங்கலை, முதுகலை மாணவிகள், விரிவுரையாளர் என 1,500 பேர் பயன் பெற்றனர். ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் பிரகதீஸ்வரி, மார்கரெட், ரோசாலேண்ட், பாத்திமாமேரி, கீர்த்திகா, பிரியா ஸ்டாலின் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக விரிவுரையாளர் கோகுலலஷ்மி வரவேற்றார். விரிவுரையாளர் சுபா நன்றி கூறினார்.