/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
துபாயில் இருந்தபடி துாண்டுதல் டூ - வீலரை எரித்த 4 பேர் கைது
/
துபாயில் இருந்தபடி துாண்டுதல் டூ - வீலரை எரித்த 4 பேர் கைது
துபாயில் இருந்தபடி துாண்டுதல் டூ - வீலரை எரித்த 4 பேர் கைது
துபாயில் இருந்தபடி துாண்டுதல் டூ - வீலரை எரித்த 4 பேர் கைது
ADDED : ஏப் 30, 2024 10:42 PM
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், மாவிலங்கை கிராமம் காட்டுகொட்டகை பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் கலைச்செல்வன், 38. இவர், 2013ல் இருந்து துபாயில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்கிறார். இவர், மாவிலங்கை கிராமத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் குடியிருக்கிறார்.
கடந்த 27ம் தேதி இரவு 10:30 மணிக்கு காரில் வந்த கும்பல், வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்த, 'யமஹா பேசினோ' டூ - வீலரை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு காரில் தப்பியது. கலைச்செல்வன் மனைவி சூர்யா, 32, புகாரின்படி, கை.களத்துார் போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், 2019ம் ஆண்டு கலைச்செல்வன் துபாயில் இருந்தபோது, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்த பாலமுருகன், 45, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பாலமுருகன், கலைச்செல்வனிடம் பாதி விலைக்கு கட்டுமான பொருள், தங்கம், டூ - வீலர் வாங்கி விற்பனை செய்து லாப பங்கு தொகையுடன் அசலையும் கொடுப்பதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய கலைச்செல்வன், 1.5 கோடி ரூபாயை பாலமுருகனிடம் கொடுத்துள்ளார். பாலமுருகன் இதுநாள் வரை பணத்தை திருப்பி தரவில்லை. இதனால், கலைச்செல்வனுக்கும், பாலமுருகனுக்கும் விரோதம் ஏற்பட்டது. கலைச்செல்வன் கடந்த 4ம் தேதி ஊருக்கு வந்து, 22ம் தேதி மீண்டும் துபாய் சென்றார்.
இந்நிலையில் பால முருகன், துபாயில் இருந்தவாறு, 27ம் தேதி இரவு 10:30 மணிக்கு கலைச்செல்வன் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டூ- - வீலர் மீது பெட்ரோல் ஊற்றி கூலிப்படையினரை ஏவி எரித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையை சேர்ந்த, 29 முதல் 48 வயது வரையிலான நான்கு பேரை, கை.களத்துார் போலீசார் கைது செய்தனர்.