/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
உப்பு பாக்கெட்டில் முடி, பீடித்துண்டு
/
உப்பு பாக்கெட்டில் முடி, பீடித்துண்டு
ADDED : மார் 02, 2025 01:15 AM

பெரம்பலுார்: கல் உப்பு பாக்கெட்டில் முடி, பீடி துண்டு இருந்ததால் நுகர்வோர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.
பெரம்பலுார், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஸ்டாலின் செல்லதுரை, 59. இவர், இரு நாட்களுக்கு முன் இதே பகுதி மளிகை கடை ஒன்றில், 'டைமண்ட்' என்ற கம்பெனி கல் உப்பு பாக்கெட் வாங்கினார்.
நேற்று காலை சமையலுக்கு பயன்படுத்துவதற்காக, அந்த உப்பு பாக்கெட்டை பிரித்த போது, அதில் முடி மற்றும் பீடித்துண்டு ஆகியவை இருந்தன.
அதிர்ச்சியடைந்த அவர், டைமண்ட் கல் உப்பு கம்பெனியின் மொபைல் போனை தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசியவர், முறையாக பதிலளிக்கவில்லை.
பெரம்பலுார் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம், ஸ்டாலின் செல்லதுரை புகார் கொடுத்தார்.
உரிய பதில் கிடைக்காததால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, அவர் தெரிவித்தார்.