/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
விவசாயி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
/
விவசாயி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
ADDED : ஏப் 18, 2024 01:02 AM
பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், சிங்கராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலசாமி,80, விவசாயி, சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள் விவசாயம் செய்கிறார்.
இவர், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரது வீட்டில் கணக்கில் வராத பணம் இருப்பதாக தேர்தல் தொடர்பான நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குச் சென்ற அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்ததில், தனது பேத்தி திருமணத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் பணம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து, அடைக்கலசாமி வீட்டுக்கு வந்த திருச்சி வருமான வரித்துறையின், தேர்தல் நகர்வுகள் பிரிவு துணை ஆணையர் கண்ணன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், அவரது வீட்டில் ரூ.20 லட்சம் இருப்பது தெரியவந்தது.
அது தனது பேத்தியின் திருமணத்துக்காக வைத்துள்ளதாக அடைக்கலசாமி தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட அதிகாரிகள், தேவைப்படும் நேரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்து சென்றனர்.
அடைக்கலசாமி வீட்டிலிருந்து ரொக்க பணம், ஆவணங்கள் என எதையும் அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது.

