/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பெரம்பலுார் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நுாதன போராட்டம்
/
பெரம்பலுார் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நுாதன போராட்டம்
பெரம்பலுார் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நுாதன போராட்டம்
பெரம்பலுார் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நுாதன போராட்டம்
ADDED : ஆக 06, 2024 12:31 AM
பெரம்பலுார்:ரம்பலுார் மாவட்டம், குரும்பலுார் அரசு கலைக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், கோரிக்கைகள் அடங்கிய மனுவை, சடலம் போல் செய்யப்பட்ட உருவ பொம்மையிடம் வழங்கி, நுாதன போராட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்களின் சார்பில் உறுப்பு கல்லுாரிகளாக செயல்பட்டு வந்த 41 உறுப்பு கல்லுாரிகள், 2019 ம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளாக தரம் உயர்த்தப்பட்டது.
தரம் உயர்த்தப்பட்ட போது, கல்லுாரிகளில் உள்ள பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப விரிவுரையாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், சில பாடப்பிரிவுகளுக்கு மட்டும் கவுரவ விரைவுரையாளர்கள் மூலம் கல்வி கற்பிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு பல்கலைக்கழகமே ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசின் உயர் கல்வித்துறை உத்தரவிட்டது.
அந்த வகையில், பெரம்பலுார் அரசு கலைக் கல்லுாரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கடந்த ஆண்டு அக்., மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை அரசுக்கும், துறை சார்ந்த அலுவலர்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் நிலுவையில் உள்ள ஊதியம் வழங்கப்படாததால், அதிருப்தி அடைந்த, 35 கவுரவ விரிவுரையாளர்கள், 8 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 43 பேர் பெரம்பலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
15வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று சடலம் போன்ற உருவ பொம்மைக்கு மாலையிட்டு, மலர் வளையம் வைத்து, அந்த உருவ பொம்மையிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து நுாதன போராட்டம் நடத்தினர்.