/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
மாணவர் ஓட்டிய டிப்பர் லாரி மோதி பள்ளி ஆசிரியர் மரணம்
/
மாணவர் ஓட்டிய டிப்பர் லாரி மோதி பள்ளி ஆசிரியர் மரணம்
மாணவர் ஓட்டிய டிப்பர் லாரி மோதி பள்ளி ஆசிரியர் மரணம்
மாணவர் ஓட்டிய டிப்பர் லாரி மோதி பள்ளி ஆசிரியர் மரணம்
ADDED : ஏப் 01, 2024 04:17 AM
பெரம்பலுார்: உத்தர பிரதேசம் மாநிலம், பூட்டான் சிவில் லைன்ஸ் டன்டான் லேன் பகுதியை சேர்ந்தவர் அன்மோல் ஜூனேஜா, 31. இவர், கடந்த ஆண்டு டிச., 25ம் தேதி முதல் பெரம்பலுார் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
நேற்று மதியம், பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்த போது, கவனக்குறைவு, அதிவேகமாக ஜல்லிக்கற்கள் லோடு ஏற்றி வந்த டிப்பர் லாரி அன்மோல் ஜூனேஜா மற்றும் அங்கு நின்றிருந்த ஷேர் ஆட்டோக்கள் மீது மோதியது.
இதில், அன்மோல் ஜூனேஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 18 வயது முதல் 80 வயது வரையிலான நான்கு பேர் படுகாயமடைந்தனர். நான்கு ஷேர் ஆட்டோக்கள் சேதமாகின.
விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவரான அசூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சூர்யா, 20, என்பவரை, பெரம்பலுார் போலீசார் கைது செய்தனர். இவர், பெரம்பலுார் தனியார் கல்லுாரியில் பி.இ., இரண்டாமாண்டு படிக்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

