/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
காலை உணவு திட்ட ஆய்வில் கலெக்டருக்கு சிறப்பு கவனிப்பு
/
காலை உணவு திட்ட ஆய்வில் கலெக்டருக்கு சிறப்பு கவனிப்பு
காலை உணவு திட்ட ஆய்வில் கலெக்டருக்கு சிறப்பு கவனிப்பு
காலை உணவு திட்ட ஆய்வில் கலெக்டருக்கு சிறப்பு கவனிப்பு
ADDED : ஆக 23, 2024 02:53 AM

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்ட கலெக்டராக புதிதாக பொறுப்பேற்றுள்ளவர் கிரேஸ் பச்சாவ். இவருக்கு தமிழில் பேச தெரியவில்லை. இதனால், பொதுமக்களுடன் சகஜமாக உரையாட இயலவில்லை.
இந்நிலையில், தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்ட ஆய்வின்போது, கலெக்டர் கிரேஸ் பச்சாவ்வுக்கு மட்டும் சிறப்பு கவனிப்பு வழங்கப்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்யும் இவர், டேபிள், சேரில் அமர்ந்து, பீங்கான் தட்டு வாழை இலை, ஸ்பூன் ஆகியவற்றுடன் உணவு அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், காலை உணவு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்யும் போது, மாணவர்களுடன் அமர்ந்து, எவ்வித பாரபட்சமும் இல்லாமல் உணவு அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவரது தலைமையின் செயல்படும் அரசின், மாவட்ட கலெக்டரான இவர், பாரபட்சமாக இருப்பது மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.