ADDED : மார் 19, 2026 06:32 AM

அ நிறம் | அளவு
பெரம்பலுார்: காட்டு முயலை வேட்டையாடிய, 12 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பெரம்பலுார்,- பாடாலுார் பகுதியி ல், வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக கையில் தடிகளுடன் சுற்றி திரிந்த கும்பலை, மடக்கி பிடித்து விசாரித்தனர்.
கரூர் மாவட்டம், வாலியம்பட்டி கிராமத்தை சேர்ந்த, 19 முதல், 48 வயது வரையிலான 12 பேர் கும்பலை சேர்ந்த அவர்களிடம், இறந்த நிலையில் காட்டு முயல், அதை கொல்ல பயன்படுத்திய தடிகள், குத்துகோல் ஆகியவற்றை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விலங்கு வேட்டையாடிய அவர்களை, வனத்துறை அதிகாரிகள் கைது செய்து, 52,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
