/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
17 செம்மறி ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி பலி
/
17 செம்மறி ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி பலி
ADDED : ஏப் 27, 2025 11:53 PM
பெரம்பலுார்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தவசி, 47. இவர், பெரம்பலுார் மாவட்டம், மருவத்துார் கிராமத்தில் சங்கர் என்பவரது வயலில் பட்டி அமைத்து, 217 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
வழக்கம் போல நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக தவசி ஓட்டிச் சென்றார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை, தன் வயலில் அறுவடை செய்யப்பட்ட மச்சாச்சோள வயலில் கழிவுகளை தீயிட்டு கொளுத்தியுள்ளார். அப்போது, அருகில் இருந்த ஆட்டு பட்டிக்கும் தீ பரவியது.
பட்டியில் அடைக்கப்பட்டிருந்த, 17 செம்மறி ஆட்டுக்குட்டிகள் எரிந்து கருகின. வேப்பூர் தீயணைப்பு துறையினர், தீ பரவுவதை கட்டுப்படுத்தினர்.
மருவத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

