தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ பழமையான பெருமாள் சிலை பெரம்பலுாரில் கண்டெடுப்பு 

 பழமையான பெருமாள் சிலை பெரம்பலுாரில் கண்டெடுப்பு 

 பழமையான பெருமாள் சிலை பெரம்பலுாரில் கண்டெடுப்பு 


ADDED : மார் 09, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 04:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரம்பலுார்: வீடு கட்ட தோண்டிய குழியில், பித்தளை உலோகத்தாலான பழமையான பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

பெரம்பலுார் மாவட்டம், மருதையான் கோவிலை சேர்ந்தவர் பாலசந்தர். இவர், புதிதாக வீடு கட்டுவதற்காக நேற்று பகல் 12:45 மணிக்கு குழி தோண்டினார்.

மொத்தம், 5 அடி ஆழத்தில் குழி தோண்டிய போது, 2 அடி உயரமுள்ள பித்தளை உலோகத்தால் ஆன பெருமாள் சிலை, மணி போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து, தகவலறிந்த ஆலத்துார் தாசில்தார் கவிதா, நிகழ்விடத்திற்கு சென்று, கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கைப்பற்றினார். அவை, ஆலத்துார் தாசில்தார் அலுவலகத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us