/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
கோவிலை கையகப்படுத்த முயற்சி; அறநிலைய துறைக்கு மக்கள் எதிர்ப்பு
/
கோவிலை கையகப்படுத்த முயற்சி; அறநிலைய துறைக்கு மக்கள் எதிர்ப்பு
கோவிலை கையகப்படுத்த முயற்சி; அறநிலைய துறைக்கு மக்கள் எதிர்ப்பு
கோவிலை கையகப்படுத்த முயற்சி; அறநிலைய துறைக்கு மக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 16, 2025 12:33 AM

பெரம்பலுார்; கோவிலை கையகப்படுத்தும் முயற்சியை அறநிலையத்துறை கைவிட வலியுறுத்தி, பொதுமக்கள் மண்ணெண்ணெய் கேனுடன் கோவில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலுார் மாவட்டம், காருகுடி கிராமத்தில், பொதுமக்கள் நிதியில் கட்டப்பட்ட அய்யனார் கோவிலில், திருவிழாவின் போது, இரு தரப்பு மக்களிடையே பிரச்னை ஏற்பட்டது. குன்னம் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சு நடந்தது.
கோவிலில் அனைவரும் தரிசனம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டு, இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர். தகவலறிந்த அறநிலைய துறையினர், கோவில் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும், கோவில் நிர்வாகம் முழுதும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி, கோவிலில் உண்டியல் வைத்து, அதில் வரும் காணிக்கை பொருட்களையும் எடுத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்தனர்.
காருகுடி கிராம மக்கள் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர், கிராம மக்கள் பங்களிப்பில் கட்டப்பட்ட கோவிலுக்கு, அறநிலைய துறையினர் உண்டியல் வைப்பதை ஏற்க முடியாது. கோவில் கிராம மக்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் எனக்கூறி, பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு வருவதை அறிந்த கிராம மக்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மண்ணெண்ணெய் கேனுடன் கோவில் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினர். கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியதை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர்.