தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ 'ஆடியோ ரிலீஸால்' பா.ஜ.,வில் பரபரப்பு

 'ஆடியோ ரிலீஸால்' பா.ஜ.,வில் பரபரப்பு

 'ஆடியோ ரிலீஸால்' பா.ஜ.,வில் பரபரப்பு


ADDED : ஏப் 24, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலுார்,:பா.ஜ., மாவட்ட தலைவர் மீது அவதுாறு பேசும் ஆடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலுார் அ.தி.மு.க., வேட்பாளர், பா.ஜ., நிர்வாகிகளுக்கு பூத் செலவுக்கு வழங்க கொடுத்த பணத்தை, அரியலுார் மாவட்ட பா.ஜ., தலைவர் டாக்டர் பரமேஸ்வரி என்பவர், பூத் கமிட்டி செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தரவில்லை.

இதைத் தொடர்ந்து, பா.ஜ., மீனவரணி முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் என்பவர், பா.ஜ., நிர்வாகிகள், 'வாட்ஸாப்' குழுவில் ஆடியோ பதிவிட்டார். அதில், 'மாவட்ட தலைவர் பரமேஸ்வரி, பூத் கமிட்டி செலவு தொகையை கூட தரவில்லை; நீங்கள், ஏன் மாவட்ட தலைவராக இருக்கிறீர்; ராஜினாமா செய்யுங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

அவர் பேசிய ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us