தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ ஆசிரியரை முட்டிக்கால் போட வைத்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை

 ஆசிரியரை முட்டிக்கால் போட வைத்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை

 ஆசிரியரை முட்டிக்கால் போட வைத்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை

4


ADDED : செப் 02, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 06:37 AM

4


4
Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலுார்: அரசு பள்ளி ஆசிரியரை, அப்பள்ளியில் படிக்கும் மாணவரின் தந்தை ஒருவர் முட்டிக்கால் போட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலுார் மாவட்டம், தேனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர் ஒருவரின் தந்தையான ராஜசேகர், ஊராட்சி மன்ற செயலராகவும், தாய், பள்ளி மேலாண் குழு தலைவராகவும் உள்ளனர்.

இப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களான, நல்லாசிரியர் விருது பெற்ற ராஜா, சித்ரா ஆகியோரை பற்றி, அந்த மாணவர், வகுப்பறை பலகையில் ஆபாசமாக விமர்சித்து , ஜூலை 30ம் தேதி கேலி சித்திரம் வரைந்துள்ளார்.

இதையறிந்த, வணிகவியல் ஆசிரியர் கபில்தேவ், அந்த மாணவரை கண்டித்ததுடன், முட்டிக்கால் போட வைத்துள்ளார்.

தகவலறிந்து பள்ளிக்கு வந்த மாணவரின் தந்தையான ராஜசேகர், ஆசிரியர் கபில்தேவை மிரட்டி, முட்டிக்கால் போட வைத்துள்ளார்.

இது குறித்து பள்ளி ஆசிரியர்கள், பெரம்பலுார் கலெக்டர் ஷரண்யா அறியிடம் மனு கொடுத்தனர். இது குறித்து போலீஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us