/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
விடுதி உணவில் பல்லி மாணவியர் 'அட்மிட்'
/
விடுதி உணவில் பல்லி மாணவியர் 'அட்மிட்'
ADDED : அக் 26, 2024 04:08 AM

பெரம்பலுார் : அரியலுார் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் உள்ள, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில், பிளஸ் 1 மாணவியர் மூன்று பேரும், பிளஸ் 2 மாணவியர் மூன்று பேரும் தங்கி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.
இந்நிலையில், விடுதியில் நேற்று காலை மாணவியருக்கு பொங்கல் உணவு தரப்பட்டது. இதை ஐந்து பேர் சாப்பிட்டுள்ளனர். ஒருவர் மட்டும் சாப்பிடாமல் அறையில் வைத்து விட்டார்.
ஆறு பேரும் பள்ளிக்கு சென்ற நிலையில், விடுதி உணவு சாப்பிட்ட ஐந்து மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே, அவர்கள் பொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
அப்போது, மற்றொரு மாணவி வாங்கி வைத்திருந்த, சாப்பிடாத பொங்கலை ஆய்வு செய்ததில், அதில், பல்லி இறந்த நிலையில், சமைக்கப்பட்டு கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் செந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.