மின் இணைப்புக்கு லஞ்சம் உதவி பொறியாளர் சிக்கினார்
மின் இணைப்புக்கு லஞ்சம் உதவி பொறியாளர் சிக்கினார்
ADDED : ஆக 20, 2026 11:29 PM

அ நிறம் | அளவு
பெரம்பலுார்: மின் இணைப்பு வழங்க, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, உதவி மின் பொறியாளர் ரகுராமன், 54, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், காடூரை சேர்ந்தவர் பழனிவேல், 31. இவர், புதிதாக கட்டும் வீட்டிற்கு, தற்காலிக மின் இணைப்பு வழங்க, துங்கபுரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
புதிய மின் இணைப்பு வழங்க தனக்கு, 2,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, உதவி மின் பொறியாளர் ரகுராமன், பழனிவேலிடம் கேட்டார்.
பழனிவேல், ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று மதியம், ரகுராமனிடம், பழனிவேல் பணத்தை வழங்கிய போது, மறைந்திருந்த போலீசார், ரகுராமனை கையும், களவுமாக கைது செய்தனர்.
