/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
லாரியில் மணல் கடத்திய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
/
லாரியில் மணல் கடத்திய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
லாரியில் மணல் கடத்திய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
லாரியில் மணல் கடத்திய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
ADDED : ஜூலை 12, 2025 08:00 PM
பாடாலுார்:பெரம்பலுார் அருகே மணல் கடத்திய தி.மு.க., மாவட்ட நிர்வாகி உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், மருதையாற்றில் இருந்து, அனுமதியின்றி லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக, ஆலத்துார் தாசில்தாருக்கு தகவல் வந்தது. புஜங்கராயநல்லுார் அருகே, மருதையாற்றில் கிராம உதவியாளர் ஒருவர் சோதனையில் ஈடுபட்டார். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்திய போது, மருதையாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்திருப்பது தெரிய வந்தது.
இது பற்றி, கிராம உதவியாளர், வருவாய்த்துறை அதிகாரிகள், குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதிகாரிகள் மற்றும் போலீசார் வருவதற்குள், கிராம உதவியாளரை பொருட்படுத்தாமல், டிரைவர் லாரியை எடுத்துச் சென்று விட்டார். லாரியின் பின்னால் பைக்கில் வந்த ஒருவரும் தப்பிச்சென்று விட்டார்.
இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் கிருத்திகா, குன்னம் போலீசில் அளித்த புகார்படி, புஜங்கராயநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க., மாவட்ட நிர்வாகி காட்டுராஜா உட்பட, நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.