/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பெரம்பலுார் கோவில் சொத்துக்கள் மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு
/
பெரம்பலுார் கோவில் சொத்துக்கள் மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு
பெரம்பலுார் கோவில் சொத்துக்கள் மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு
பெரம்பலுார் கோவில் சொத்துக்கள் மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு
ADDED : அக் 26, 2024 07:30 AM
சென்னை : பெரம்பலுாரில் உள்ள கோவில் சொத்துக்களை, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, பாதுகாக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கரூரை சேர்ந்த ஆனிலையப்பர் அறக்கட்டளை தரப்பில் தாக்கல் செய்த மனு:
பெரம்பலுார் வேப்பந்தட்டை பகுதியில் உள்ள, சித்தன்ன சுவாமி கோவில் நிலங்களில், சில அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. அவை கோவிலுக்கு வாடகை கொடுப்பதில்லை.
இதேபோல, பஞ்சநதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 120 ஏக்கர் நிலங்கள், தனிநபர் கட்டுப்பாட்டில் உள்ளன. பெரம்பலுார் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்ட பானி கோவில் நிலங்களை முறைகேடாக ஆக்கிரமித்து, 240 வீடுகள், திருமணம் மண்டபம் கட்டப்பட்டுள்ளன.
மதநந்தகோபால சுவாமி கோவில், அழகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட புராதனமான கோவில்கள் பாரமரிப்பு இல்லாமல் உள்ளன.
பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள, பெரும்பாலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால், கோவில்களுக்கு வருவாய் கிடைப்பதில்லை.
இது தொடர்பாக, ஹிந்து அறநிலையத்துறை, வருவாய் துறை உள்ளிட்ட மாநில அரசின் பல்வேறு துறைகளுக்கு, கடந்த ஓராண்டாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பெரம்பலுார் மாவட்ட கோவில்களையும், அதன் சொத்துக்களையும் மீட்டு பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை, அறநிலையத்துறை, வருவாய் துறை போன்ற துறைகள், 12 வாரங்களுக்குள் உரிய முறையில் பரிசீலிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.