/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
டூ - வீலர் மீது அரசு பஸ் மோதியதில் தம்பதி பலி
/
டூ - வீலர் மீது அரசு பஸ் மோதியதில் தம்பதி பலி
ADDED : ஜூலை 05, 2025 08:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே டூ - வீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், பெரிய வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 38. இவரது மனைவி சித்ரா, 32. இருவரும் டூ - வீலரில் பெரிய வடகரை கிராமத்தில் இருந்து வேப்பந்தட்டைக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பெரம்பலுாரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ், டூ - வீலர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கைகளத்துார் போலீசார் வழக்கு பதிந்து, அரசு பஸ் டிரைவர் சின்னதம்பி, 33, என்பவரை கைது செய்தனர்.