/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பா.ஜ., நிர்வாகிகள் கைது பெரம்பலுாரில் ஆர்ப்பாட்டம்
/
பா.ஜ., நிர்வாகிகள் கைது பெரம்பலுாரில் ஆர்ப்பாட்டம்
பா.ஜ., நிர்வாகிகள் கைது பெரம்பலுாரில் ஆர்ப்பாட்டம்
பா.ஜ., நிர்வாகிகள் கைது பெரம்பலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 20, 2024 01:01 AM
பெரம்பலுார்:பா.ஜ., மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பெரம்பலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலுார் மாவட்டம், மரவநத்தம் கிராமத்தில், பா.ஜ., சார்பில் கம்பம் அமைத்து, கடந்த 16ம் தேதி, கட்சிக் கொடி ஏற்றும் விழா நடந்தது.
இது, மறைமுகமாக அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக, மரவத்தம் ஆர்.சி., தொடக்கப் பள்ளி நிர்வாகி அகஸ்டின்பீட்டர், போலீசில் புகார் கொடுத்தார். புகார்படி, கொடியேற்று விழாவில் பங்கேற்ற பா.ஜ., பெரம்பலுார் மாவட்ட தலைவர் செல்வராஜ், 45, அவரது மனைவி உமாஹேமாவதி, 40, மற்றும் மரவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகளான கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், 38.
மாவட்டத் துணைத் தலைவர் மணிகண்டன், 30, வெங்கடேஷ், 32, ஆகியோர் மீது வி.களத்துார் போலீசார் 9 பிரிவுகளில் வழக்கு பதிந்து, உமாஹேமாவதியை தவிர மற்ற நான்கு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பா.ஜ., நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பெரம்பலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள காந்தி சிலை முன், பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, பா.ஜ., பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி தலைமை வகித்தார்.
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ., நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பழிவாங்கும் போக்கில் செயல்படும் வி.களத்துார் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில், பா.ஜ.,வை சேர்ந்த திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.