/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பெரம்பலுாரில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்
/
பெரம்பலுாரில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்
ADDED : ஜன 23, 2024 12:55 AM
பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம், குமட்டலுடன் விட்டு விட்டு காய்ச்சலும் ஏற்படுகிறது. நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனைகளிலும், தலா 5 - 10 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலுார் மாவட்டத்தில் பல கிராமங்களில் வேகமாக பரவி வரும் இந்த டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு, பெரம்பலுார் மாவட்ட சுகாதாரத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
இதுகுறித்து, பெரம்பலுார் கலெக்டர் கற்பகம் கூறியதாவது: பெரம்பலுார் மாவட்டத்தில், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து, டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபடுகின்றனர்.
புள்ளிவிபரங்களின் படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, பெரம்பலுார் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.

