/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
இன்று மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
/
இன்று மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
இன்று மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
இன்று மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
ADDED : ஜூலை 23, 2011 12:01 AM
பெரம்பலூர் : 'மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் இன்று நடக்கிறது' என பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: வேப்பூர் யூனியனில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு துறைகள் மூலம் வழங்கப்படும், நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை பெறாத நபர்களுக்கு மருத்துவ குழுவினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு நடக்கிறது. முகாமில், பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று கர வண்டி, கர நாற்காலி, செயற்கை கால் மற்றும் கை, முடநீக்கு சாதனம், ஊன்றுகோல், காதொலி கருவி, சோலார் பேட்டரி, பார்வையற்றோர் கை கடிகாரம், கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் மோட்டார் பொறுத்தப்பட்ட மூன்று கர வண்டி, மோட்டார் பொறுத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட உதவி, உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளில் மனவளர்ச்சி குன்றியோர்க்கான பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் 1,000 ரூபாய் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிக்கு கல்வி உதவித்தொகையாக 500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையும், பார்வையற்ற மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை, திருமண உதவித்தொகையாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம், சுயத்தொழில் செய்யும் நபர்களுக்கு 3,000 ரூபாய் மானியத்துடன் 1,500 ரூபாய் வரை கடனுதவி, இலவச பஸ் பயணச்சலுகை உள்ளிட்ட உதவிகள் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும். வருவாய்த்துறை மூலம் தகுதி உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட உதவிகளும், மாவட்ட தொழில் மை யம் மற்றும் மாவட்ட தாட்கோ மூலம் கடனுதவி, தையல் பயி ற்சி பெற்ற மாற்றுத்திறனாளிக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் தையல் இயந்திரமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் நிவாரண உதவித்தொகையாக 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை பெறவும் பதிவு செய்யாதவர்களுக்கு பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடக்கும் முகாமில் பங்கேற்கும் வேப்பூர் யூனியனை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஃபாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ 6, தேசிய அடையாள அட்டையின் நகல் மற்றும் குடும்ப அட்டையின் நகலுடன் பங்கேற்று பயன்பெறலாம்.