பெரம்பலூர் பகுதியில் இன்று மின்தடை பகுதிகள் அறிவிப்பு
பெரம்பலூர் பகுதியில் இன்று மின்தடை பகுதிகள் அறிவிப்பு
ADDED : நவ 24, 2012 04:35 AM
பெரம்பலூர்:
'பெரம்பலூர் நகர பகுதிகளில் இன்று காலை, 9 முதல் மாலை, 5.30 மணி வரை
மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது,' என, மின்வாரிய உதவி செயற்பொறியாளர்
செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
பெரம்பலூர்
துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், பெரம்பலூர்
நகர பகுதிகளான பழைய பஸ் ஸ்டாண்டு, காமராஜர் வளைவு, வடக்குமாதவி சாலை,
எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை, சங்குப்பேட்டை,
மதனகோபாலபுரம், கடைவீதி, பாலக்கரை, புது பஸ் ஸ்டாண்ட்.
நான்குரோடு,
மின்நகர், துறைமங்கலம் மற்றும் கிராமிய பகுதிகளான சிறுகுடல், பீல்வாடி,
அசூர், சித்தளி, எளம்பலூர், வடக்குமாதவி, இந்திரா நகர், போலீஸ்
குடியிருப்பு, சமத்துவபுரம், கே.புதூர், செங்குணம், அருமடல்,
கீழப்புலியூர், எஸ்.குடிக்காடு, ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல்
மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
