/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பிரிஜ் வெடித்து பொருட்கள் சேதம்
/
பிரிஜ் வெடித்து பொருட்கள் சேதம்
ADDED : அக் 07, 2025 08:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுமதி, 38. நேற்று, அவர் கூலி வேலைக்கு சென்று விட்டார்.
மாலை 4:00 மணியளவில், சுமதி வீட்டில் வெடி சத்தம் கேட்டதோடு, பூட்டிய வீட்டுக்குள் இருந்து புகையும் வந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர். கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, வீடு முழுதும் ஆங்காங்கே பொருட்கள் எரிந்த நிலையில் புகைந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்த செஞ்சேரி போலீசார் விசாரித்ததில், வீட்டுக்கு வந்து பார்த்த போது, மின்னழுத்த குறைபாட்டால் பிரிஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு, பொருட்கள் சேதமானது தெரிய வந்தது.