/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
கணவரை இரும்பு கம்பியால் தாக்கி மனைவியிடம் தாலி செயின் பறிப்பு
/
கணவரை இரும்பு கம்பியால் தாக்கி மனைவியிடம் தாலி செயின் பறிப்பு
கணவரை இரும்பு கம்பியால் தாக்கி மனைவியிடம் தாலி செயின் பறிப்பு
கணவரை இரும்பு கம்பியால் தாக்கி மனைவியிடம் தாலி செயின் பறிப்பு
ADDED : அக் 31, 2025 01:11 AM
பெரம்பலுார்:  வீட்டில் துாங்கி கொண்டிருந்த கணவரை கம்பியால் தாக்கி விட்டு, மனைவியின் கழுத்தில் இருந்த மூன்றரை சவரன் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர்.
பெரம்பலுார் நான்கு ரோடு முத்து நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் பாலமுருகன், 33. இவர், அரியலுாரில் கார் டிரைவராக வேலை செய்கிறார். பாலமுருகன் தன் மனைவி சண்முகப்பிரியா, 28, மகன், மகளுடன் வாடகை வீட்டில் வசிக்கிறார் .
நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி குழந்தைகளுடன் படுக்கை அறையில் துாங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 3:30 மணிக்கு வீட்டின் பின்பக்க இரும்பு கிரில் கேட்டில் இருந்த பூட்டை உடைத்து, மரக்கதவையும் உடைத்து, படுக்கையறைக்குள் சென்ற மர்ம நபர் சண்முகப்பிரியா அணிந்திருந்த, 3.5 சவரன் தாலி செயினை அறுக்க முயன்றார்.
அப்போது, சண்முகப்பிரியா கூச்சலிட்டார். கண் விழித்த பாலமுருகன் திருடனை தடுக்கும் போது, அவன் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால், பாலமுருகனை தாக்கி விட்டு, தாலி செயினை பறித்து தலைமறைவாகிவிட்டார்.
மர்ம நபர் தாக்கியதில் பாலமுருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளையரை தேடுகின்றனர்.

