ADDED : நவ 17, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, ஏரியில் மூழ்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி கணேசன், 35, பலியானார்.
அரியலுார் புருசோத்தமன் தெருவை சேர்ந்தவர் கணேசன்; ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர், தனக்கு சொந்தமான இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகளை, பெரம்பலுார் மாவட்டம், எளம்பலுார் பகுதியில், பட்டி அமைத்து மேய்த்தார்.
இன்று (நவ.,17) மதியம், எளம்பலுார் ஏரிக்கு குளிக்க சென்றவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். பெரம்பலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
