/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
வாய்மொழி தேர்வுக்கு மாணவியரிடம் பார்ட்டி; விரிவுரையாளர்கள் '‛சஸ்பெண்ட்'
/
வாய்மொழி தேர்வுக்கு மாணவியரிடம் பார்ட்டி; விரிவுரையாளர்கள் '‛சஸ்பெண்ட்'
வாய்மொழி தேர்வுக்கு மாணவியரிடம் பார்ட்டி; விரிவுரையாளர்கள் '‛சஸ்பெண்ட்'
வாய்மொழி தேர்வுக்கு மாணவியரிடம் பார்ட்டி; விரிவுரையாளர்கள் '‛சஸ்பெண்ட்'
ADDED : மார் 29, 2025 06:35 AM

பெரம்பலுார் : வாய்மொழி தேர்வுக்கு மதிப்பெண் வழங்க, மாணவியரிடம் பார்ட்டி கேட்ட கவுரவ விரிவுரையாளர்கள் ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் மாணவியரிடம், அந்த துறைகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் ஆறு பேர், விரைவில் நடக்க உள்ள வாய்மொழித்தேர்வுக்கு மதிப்பெண்கள் வழங்க, பிரபல ஹோட்டலில் உணவு மற்றும் விலை உயர்ந்த கிப்ட் வாங்கித்தர வேண்டும் என, கேட்டுள்ளனர்.
மாணவியர், கல்லுாரி முதல்வர் மணிமேகலைக்கு புகார் அனுப்பினர். தொடர்ந்து, தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர்களான நன்முல்லை, செந்தமிழ்ச்செல்வி, பிரபா, மலர்விழி, ஹேமமாலினி, கம்ப்யூட்டர் சயின்ஸ் கவுரவ விரிவுரையாளர் சங்கீதா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, கல்லுாரி முதல்வர் உத்தரவிட்டார்.
சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்தி, ஆறு விரிவுரையாளர்களும் நேற்று கல்லுாரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து, அங்கு வந்த கல்லுாரி கல்வி திருச்சி மண்டல இணை இயக்குநர், மாணவியர் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பேராசிரியர்களிடம் விசாரித்தார். விரிவுரையாளர்களின் சஸ்பெண்ட் உத்தரவு தொடரும் என, அவர் தெரிவித்தார்.