sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

பெரம்பலூர் அருகே டூவீலர் கார் மோதல்; ஒருவர் பலி

/

பெரம்பலூர் அருகே டூவீலர் கார் மோதல்; ஒருவர் பலி

பெரம்பலூர் அருகே டூவீலர் கார் மோதல்; ஒருவர் பலி

பெரம்பலூர் அருகே டூவீலர் கார் மோதல்; ஒருவர் பலி


ADDED : ஜூலை 24, 2011 01:18 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் தேவதாஸ் (48). இவர் நேற்று தனது டி.வி.எஸ்., சுசூகி டூவீலரில் தனது உறவினரான துறையூரை சேர்ந்த ஜெயபால் மகன் வெங்கடேசன் (40) என்பவருடன் தெரணி கிராமத்திற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். டூவீலரை தேவதாஸ் ஓட்டினார். நேற்று காலை 10.15 மணியளவில் டூவீலர் பாடாலூர் அருகே ஊட்டத்தூர் பிரிவு ரோடு பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற இன்டிகா கார் தேவதாஸின் டூவீலர் மீது மோதியது.



இதில், தேவதாஸ் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். பாடாலூர் போலீஸார் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவதாஸ் இறந்தார். பாடாலூர் போலீஸார், கார் டிரைவர் சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us