/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
வேலைவாய்ப்புவழிகாட்டி நிகழ்ச்சி
/
வேலைவாய்ப்புவழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஆக 03, 2011 12:45 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் மனிதவள
மேம்பாட்டுத்துறை சார்பில், மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி
நிகழ்ச்சி நேற்று நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி
நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவன செயலாளர்
நீலராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர்
ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கார்த்திகேயன்
வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புத்துறை அலுவலர்கள்
நந்தகுமார், சுரேஷ்குமார், விஷால், கவுதம், வினோத்கார்த்திக் ஆகியோர்
வேலாவாய்ப்பு முகாம்களில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதுவது
குறித்தும், எளிதான முறையில் வெற்றி பெறுவது எவ்வாறு என்பது குறித்தும்
பயிற்சி அளித்தனர்.இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் இளங்கோவன் மற்றும் மாணவ,
மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஸ்டீபன் லியோன், கிரீஸ், ரமேஸ், மணிமாறன்
ஆகியோர் செய்திருந்தனர்.