/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
பொங்கல் பரிசு தொகுப்பு கேட்டு பார்வையற்றவர் கோரிக்கை மனு
/
பொங்கல் பரிசு தொகுப்பு கேட்டு பார்வையற்றவர் கோரிக்கை மனு
பொங்கல் பரிசு தொகுப்பு கேட்டு பார்வையற்றவர் கோரிக்கை மனு
பொங்கல் பரிசு தொகுப்பு கேட்டு பார்வையற்றவர் கோரிக்கை மனு
ADDED : ஜன 20, 2024 12:38 AM

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்,35. இவரது மனைவி ராஜாமணி. இருவரும் பார்வை இழந்தவர்கள். சென்னையில் ரயில்வே ஸ்டேஷனில் பொம்மைகள்விற்று வருகின்றனர்.
இவர்களது ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு முகவரி தொண்டப்பாடியாக உள்ளது.
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகையை, தொண்டப்பாடியில் உள்ள ரேஷன் கடையில் வாங்குவதற்காக புறப்பட்டபோது, சென்னையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், நெரிசலில் சிக்கினர்.
பொங்கல் விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம்ரேஷன் பொங்கல் பரிசுத்தொகை வாங்குவதற்காக, கடைக்கு சென்றனர். 14-ம் தேதியுடன் பொங்கல் பரிசுத்தொகை கொடுப்பதை முடித்து விட்டதாக கூறிய ரேஷன் கடை பணியாளர்கள் அவரை அனுப்பி விட்டனர்.
இதனால் மனமுடைந்த மணிகண்டன், வேப்பந்தட்டை தாலுகா அலுவலகம் சென்று, வட்ட வழங்கல் அலுவலரிடம், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகையை பெற்றுத் தர வேண்டும் எனக் கோரி மனு கொடுத்துள்ளார்.