/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
கரும்பு விவசாயிகளின் கோரிக்கை அமைச்சரிடம் மனுவாக அளிப்பு
/
கரும்பு விவசாயிகளின் கோரிக்கை அமைச்சரிடம் மனுவாக அளிப்பு
கரும்பு விவசாயிகளின் கோரிக்கை அமைச்சரிடம் மனுவாக அளிப்பு
கரும்பு விவசாயிகளின் கோரிக்கை அமைச்சரிடம் மனுவாக அளிப்பு
ADDED : அக் 16, 2024 02:22 AM
பெரம்பலுார்:பெரம்பலுார் சர்க்கரை ஆலைக்கு ஆய்வுக்கு வந்த சுற்றுலா மற்றும் சர்க்கரை ஆலைகள் துறை அமைச்சர் ராஜேந்திரனிடம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலர் ராஜாசிதம்பரம் கொடுத்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
அரசு மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நவீனப்படுத்தும் திட்டம், இணை மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்த டெண்டர் விட்ட வேலையை, 13 ஆண்டு தாமதமாக செயல்படுத்தியதால் ஏற்பட்ட வட்டி சுமையை அரசு ஏற்க வேண்டும்.
ஆலை அபிவிருத்திக்காக வழிவகை கடனுக்காக அரசிடமிருந்து பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட கடன் சுமையை தள்ளுபடி செய்யாமல் பங்காக மாற்றியதை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வேளாண் பட்ஜெட் அறிவிப்பின்படி, 2023- - -2024ம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகையாக டன்னுக்கு 215 ரூபாயை வரும் தீபாவளிக்குள் வழங்க வேண்டும்.
பெரம்பலுார் சர்க்கரை ஆலையை லாபம் ஈட்டும் வகையில் இயக்க ஆலையில் எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை உடனே துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பல கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மனுவை பெற்ற அமைச்சர் ராஜேந்திரன், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.