/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
கைதி தப்பி ஓட்டம்; 2 போலீசார் 'சஸ்பெண்ட்'
/
கைதி தப்பி ஓட்டம்; 2 போலீசார் 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 25, 2025 11:48 PM
பெரம்பலுார்: கைதி தப்பியதால், இரண்டு போலீஸ்காரர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் வாஞ்சிநாதன், 30. இவர், 2022 ஏப்., 8ல் பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த, 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். மங்கலமேடு போலீசார் வாஞ்சிநாதனை போக்சோவில் கைது செய்து பெரம்பலுார் சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வாஞ்சிநாதனை, போலீசார் சூரியகுமார், பிரேமா ஆகிய இருவரும், சிறையிலிருந்து அழைத்து சென்று, பெரம்பலுார் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். டிச., 8 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று மாலை, வாஞ்சிநாதனை மீண்டும் சிறையில் அடைக்க, டூ - வீலரில் சூர்யகுமார் அழைத்து வந்தபோது வாஞ்சிநாதன் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, பணியில் மெத்தனமாக இருந்ததற்காக சூரியகுமார், பிரேமா ஆகிய இருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

