/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: பெரம்பலூரில் கோவில் செயல் அலுவலர் கைது
/
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: பெரம்பலூரில் கோவில் செயல் அலுவலர் கைது
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: பெரம்பலூரில் கோவில் செயல் அலுவலர் கைது
ரூ.3 ஆயிரம் லஞ்சம்: பெரம்பலூரில் கோவில் செயல் அலுவலர் கைது
ADDED : மார் 06, 2025 09:05 PM

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கோவிலை புதுப்பிக்க ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்ப ரூ. 3,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகே செங்குணம் கிரமத்தில் மிகவும் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பிப்பதற்காக, கோயில் செயல் அலுவலரான மயிலாடுதுறையைச் சேர்ந்த கோவிந்தராஜை, செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த அறங்காவல் குழு நிர்வாகி சிவா அணுகினார். ஆனால், இதற்கான பரிந்துரை கடிதத்தை சென்னையில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்ப, கோவிந்தராஜ் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார்.ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவா, பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
தொடர்ந்து, பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மதன கோபால சுவமி கோவில் அலுவலகத்தில் கோவிந்தராஜை சந்தித்த சிவா, லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரையின்படி லஞ்சப்பணத்தை கொடுத்தார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் கோவிந்தராஜை கையும் களவுமாக பிடித்தனர்.தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் உமாவை நேரில் வரவழைத்து அவர் முன்னிலையில் கோவிந்த ராஜிடம் விசாரணை நடத்தினர். பிறகு அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.