/
உள்ளூர் செய்திகள்
/
பெரம்பலூர்
/
தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் நட்சத்திர கலை விழா துவக்கம்
/
தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் நட்சத்திர கலை விழா துவக்கம்
தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் நட்சத்திர கலை விழா துவக்கம்
தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் நட்சத்திர கலை விழா துவக்கம்
ADDED : பிப் 14, 2025 05:04 AM

பெரம்பலுார்: பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் மூன்று நாட்கள் நடக்கும் 'நட்சத்திர கலை விழா - 2025' நேற்று துவங்கியது.
பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், குத்து விளக்கேற்றி வைத்து, விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வாவிற்கு சேஞ்ச் மேக்கர் விருது, திருச்சி ஜமால் முகமது குழும செயலாளர் காஜா நஜிமுதீனுக்கு சிறந்த சமூக சாதனையாளர் விருது, கவிஞர் இளம்பிறைக்கு இன்ஸ்பிரேஷன் ஐகான் விருது, அல்சாஸினோ லைப் சயின்சஸ் இயக்குநர் சரண்யா, ஆஸ்திரேலியா டி.எவி.சிஸ்டம்ஸ் பிரைவேட் லிட்., தலைமை நிர்வாக அதிகாரி நித்தேஷ் புஷ்பராஜ் ஆகியோருக்கு சிறந்த முன்னாள் மாணவர் விருதுகளை வழங்கினார்.
நடிகை கீர்த்தி ஷெட்டி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலாளர் நீலராஜ், நிர்வாக இயக்குநர்கள் நிர்மல், நீவாணி, நகுலன், ராஜபூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
இன்று 14ம் தேதி இரண்டாம் நாள் கலைவிழாவில் சினிமா பாடகர்கள் அசல் கோலார், பூஜா வெங்கட், சாம் விஷால் ஆகியோர் ஆடல், பாடல் இன்னிசை நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். நாளை 15ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி, நடிகை மமிதா பைஜூ ஆகியோர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகின்றனர்.

